விதைகளை பரிசோதனை செய்து கீரைகளை பயிர் செய்யவேண்டும்: வேளாண் அலுவலர் அறிவிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட விதை பரிசோதனை ஆய்வக மூத்த வேளாண் அலுவலர் சுகுணா அறிக்கையில் கூறியிருப்பதாவது; திருவள்ளூர் மாவட்டத்தில், கீரை விவசாயத்தில் விவசாயிகள் பலர் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர்.கீரைகளில் மட்டுமே ‘விட்டமின் ஏ’ சத்து அதிகளவு கிடைக்கும். விவசாய தோட்டங்கள் தவிர, மாடித் தோட்டம், வீடுகளில் இருக்கும் சிறிய இடத்திலும் கீரை வகைகளை பயிரிடலாம். அரை கீரை, சிறு கீரை, பாலக்கீரை, சிவப்புதண்டு கீரை, பச்சைதண்டு கீரை, பருப்பு கீரை, காசினி கீரை, வெந்தயக்கீரை, கொத்தமல்லி என இவற்றை தொட்டியிலும் வளர்க்கலாம்.

திருவள்ளூர் மாவட்ட வேளாண் விதை பரிசோதனை ஆய்வகத்தில், கடந்தாண்டு 500 கீரை விதை மாதிரிகள் பகுப்பாய்வு செய்ததில், 100 விதை மாதிரிகள் தரமற்றவை என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள், விதை உற்பத்தியாளர்கள், விதை விற்பனையாளர்கள் தங்களிடம் உள்ள கீரை விதைகளில், 50 கிராம் விதை மட்டும் எடுத்து திருவள்ளூர் ஆயில் மில் அருகில் உள்ள விதை பரிசோதனை நிலையத்தில் கொடுத்து, விதையின் தரத்தை தெரிந்து பயிரிடலாம். இதன்மூலம் எவ்வித மகசூல் இழப்பும் ஏற்படாமல் விவசாயிகள் நல்ல லாபத்தினை ஈட்ட முடியும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post விதைகளை பரிசோதனை செய்து கீரைகளை பயிர் செய்யவேண்டும்: வேளாண் அலுவலர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: