நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை; சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை

கம்பம்: நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.தேனி மாவட்டம், கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் சுருளி அருவி அமைந்துள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோயில் உள்ளதால் ஆன்மிகத் தலமாகவும், சுற்றுலாத்தலமாகவும் திகழ்கிறது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். அருவியில் நீராடி சுவாமி தரிசனம் செய்து வழக்கம்.

இந்நிலையில், அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரிசிப்பாறை, ஈத்தக்காடு, தூவானம் பகுதியில் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வருவதால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் குளிக்க சுற்றுலாப்பயணிகளுக்கு கம்பம் கிழக்கு வனச்சரக அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். கனமழை பெய்து வருவதால் அருவிக்கு பொதுமக்கள் வர வேண்டாம் என வனத்துறையினர் கேட்டு கொண்டுள்ளனர்.

The post நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை; சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை appeared first on Dinakaran.

Related Stories: