நீண்ட கால முதல்வர் பதவி; ஒடிசா முதல்வர் பட்நாயக் சாதனை: 2வது இடம் பிடித்தார்

புவனேஸ்வர்: மேற்கு வங்க முன்னாள் முதல்வரும் மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவருமான ஜோதிபாசு 23 ஆண்டுகள் 137 நாட்கள் முதல்வராக இருந்து சாதனை படைத்தார். ஜோதிபாசு கடந்த 1977ம் ஆண்டு ஜூன் 21 முதல் 2000, மார்ச் 5ம் தேதி வரை அதாவது 23 ஆண்டுகள் 137 நாட்கள் பதவியில் இருந்தார். சிக்கிமில் முதல்வராக இருந்தவர் பவன் குமார் சாம்லிங். கடந்த 1994ம் ஆண்டு டிசம்பர் 12 முதல் 2019 மே 27ம் தேதி வரை 24 ஆண்டுகளுக்கும் மேல் 5 முறை முதல்வராக இருந்த சாம்லிங் இந்தியாவின் நீண்ட கால முதல்வர் என்ற சாதனை படைத்தார்.

ஜோதிபாசு, சாம்லிங் ஆகியோருக்கு பிறகு ஒடிசா முதல்வர் நவீன் பட்னாயக்கும் 5 முறை முதல்வராகி உள்ளார். கடந்த 2000ம் ஆண்டு மார்ச் 5ம் தேதி பதவியேற்ற நவீன் பட்னாயக் 23 ஆண்டுகள் 138 நாட்கள் தொடர்ந்து பதவி வகித்து ஜோதிபாசுவின் சாதனையை முறியடித்துள்ளார். வரும் 2024ம் ஆண்டு பேரவை தேர்தலிலும் வெற்றி பெற்றால் நாட்டின் நீண்ட காலம் ஆட்சி செய்யும் முதல்வர் என்ற பெருமை அவருக்கு கிடைக்கும்.

The post நீண்ட கால முதல்வர் பதவி; ஒடிசா முதல்வர் பட்நாயக் சாதனை: 2வது இடம் பிடித்தார் appeared first on Dinakaran.

Related Stories: