தொடர்ந்து 5வது ஆண்டாக பைனலில் ஜோகோவிச்

விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் விளையாட, செர்பிய நட்சத்திரம் நோவாக் ஜோகோவிச் தொடர்ந்து 5வது ஆண்டாக தகுதி பெற்றுள்ளார். அரையிறுதியில் இத்தாலி வீரர் யானிக் சின்னருடன் நேற்று மோதிய ஜோகோவிச் 6-3, 6-4, 7-6 (7-4) என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 47 நிமிடத்துக்கு நீடித்தது. விம்பிள்டன் தொடரில் ஏற்கனவே 7 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஜோகோவிச், தொடர்ந்து 5வது ஆண்டாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

ஸ்பெயினின் கார்லோஸ் அல்கரஸ் – டானில் மெத்வதேவ் (ரஷ்யா) இடையே நடக்கும் 2வது அரையிறுதியில் வெற்றி பெறும் வீரர், இறுதிப் போட்டியில் ஜோகோவிச்சுடன் மோதுவார். ஜோகோவிச் 9வது முறையாக விம்பிள்டன் பைனலிலும், 35வது முறையாக கிராண்ட் ஸ்லாம் பைனலிலும் விளையாட உள்ள நிலையில், அல்கரஸ் அல்லது மெத்வதேவ் முதல் முறையாக விம்பிள்டன் பைனலில் களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post தொடர்ந்து 5வது ஆண்டாக பைனலில் ஜோகோவிச் appeared first on Dinakaran.

Related Stories: