திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சியில் வண்டிக்காரர் தெருவைச் சேர்ந்த தாமோதரன்-திலகவதி தம்பதியரின் மகன் பிரகாஷ்ராஜ்(16). அவன் இங்குள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில், படிப்பில் கவனம் செலுத்தவில்லை எனக்கூறி தாயார் அறிவுறுத்தியதாகவும், வரும் பிளஸ் டூவில் அதிக மதிப்பெண்கள் எடுக்க இப்போதே தயாராக வேண்டும் என்று வழியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரம் அடைந்த பிரகாஷ் ராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நேற்று மின்விசிறியில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த டவுன் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மாணவன் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.
