அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாள் விழாவில், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பன்னாட்டு குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாள் விழா சென்னையில் நடைபெற்று வருகிறது. சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் விழா நடைபெறுகிறது. அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தில் 100 பேருக்கு 718.94 கோடி மானிய ஆணையை முதல்வர் வழங்குகிறார்.

செங்கல்பட்டு, திருச்சி, மதுரையில் தொழிற்பேட்டைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். பண்ருட்டியில் முந்திரி பதப்படுத்தும் குறுந்தொழில் குழுமம், மெய்நிகர் கண்காட்சியகத்தையும் திறக்கிறார். 10 மாணவ அணிகளின் புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.10 லட்சத்தை முதல்வர் வழங்குகிறார். ரூ.1,510 கோடியில் 7,400 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. 100 முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள், கடன் வசதியாக்கல், ஃபேம் டிஎன், சிட்பி இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.

சிறந்த தொழில்முனைவோர், வேளாண் சார் தொழில் நிறுவன விருது உள்ளிட்ட விருதுகளை முதல்வர் வழங்குகிறார். சிறு, குறு நிறுவனங்களுக்கு நிதி வசதியை சிறப்பாக வழங்கிய 3 வங்கிகளுக்கு முதல்வர் விருது வழங்குகிறார். விழாவில் ரூ.1,723.05 கோடியில் முதலீடு உறுதி செய்யப்பட்டு 30,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Related Stories: