நெல்லியாம்பதி மலைப்பாதையில் குரங்குகளுக்கு பீர் கொடுத்த சுற்றுலா பயணி

*வீடியோ வைரல்

பாலக்காடு : கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் நெம்மாராவை அடுத்துள்ள நெல்லியாம்பதி மலைப்பாதையில் 14வது கொண்டை ஊசி வளைவில் சாலையோரங்களில் நடமாடும் குரங்குகளுக்கு சுற்றுலா பயணிகள் பீர் கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாலக்காடு மாவட்டம் நெம்மாராவை அடுத்துள்ள ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படு்ம் நெல்லியாம்பதி சுற்றுலா தலத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், கடந்த 14ம் தேதி ஜீப்பில் வந்த சுற்றுலா பயணிகள் மது குடித்துவிட்டு போதையில் போத்துண்டி – நெல்லியாம்பதி சாலையில் 14 வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் தடுப்பு சுவர்களில் அமர்ந்துள்ள குரங்களுக்கு அருகில் வாகனத்தை நிறுத்தி பீர் பாட்டிலை திறந்து குரங்குகளுக்கு குடிக்க தரையில் ஊற்றினர். இவற்றை அவ்வழியாக வந்த ஒருவர் போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூகவலைத்தலங்களில் பதிவிட்டுள்ளார். இது வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post நெல்லியாம்பதி மலைப்பாதையில் குரங்குகளுக்கு பீர் கொடுத்த சுற்றுலா பயணி appeared first on Dinakaran.

Related Stories: