நேதாஜி உயிருடன் இருந்திருந்தால் இந்தியா பிளவுப்பட்டிருக்காது: அஜித் தோவல் பேச்சு

புதுடெல்லி: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயிருடன் இருந்திருந்தால் இந்தியா பிளவுப்பட்டிருக்காது என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேசினார். டெல்லியில் நடந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நினைவு கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: நேதாஜி தனது வாழ்க்கை முழுவதும் பல்வேறு கட்டங்களில் துணிச்சலைக் காட்டினார். மகாத்மா காந்திக்கு சவால்விடும் துணிச்சலைக் கொண்டிருந்தார். காங்கிரஸிலிருந்து வெளியே வந்ததும் மீண்டும் தனது போராட்டத்தை தொடங்கினார். ஜப்பானைத் தவிர வேறு எந்த நாடும் அவரை ஆதரிக்கவில்லை. ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடுவேன், விடுதலைக்காகக் கெஞ்ச மாட்டேன் என்பதுதான் சுபாஷ் சந்திரபோஸ் மனதில் தோன்றிய கருத்து. சுதந்திரம் என் உரிமை, அதை நான் பெற வேண்டும் என்றார்.

சுபாஷ் சந்திர போஸ் இருந்த காலத்தில் இந்தியா பிளவுப்பட்டிருக்காது. முழு சுதந்திரம் மற்றும் விடுதலையை விட குறைவான எந்தவொன்றுக்காகவும் நான் சமரசம் செய்து கொள்ளமாட்டேன் என்று நேதாஜி கூறுவார். அரசியல் அடிபணிதலில் இருந்து இந்த நாடு விடுதலை பெற வேண்டும் என்பது மட்டும் இல்லாமல், பொதுமக்களின் அரசியல், சமூகம் மற்றும் கலாசார மனநிலை மாற வேண்டிய தேவை உள்ளது என விரும்பியவர் நேதாஜி. வரலாறு நேதாஜிக்கு இரக்கமற்றதாக இருந்தது. ஆனால் பிரதமர் மோடி அதை மீண்டும் உயிர்ப்பிக்க ஆர்வமாக இருந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

The post நேதாஜி உயிருடன் இருந்திருந்தால் இந்தியா பிளவுப்பட்டிருக்காது: அஜித் தோவல் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: