சேலம் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்கு ரூ.1500 வாங்கி கல்லா கட்டும் ஊழியர்கள்

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தினசரி ஏழை, எளிய மக்கள் ஏராளமானோர் பல்வேறு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். குறிப்பாக மகப்பேறு பிரிவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 25 முதல் 30 பிரசவங்கள் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பிரசவத்திற்காக அனுமதிக்கப்படுபவரின் குடும்பத்தாரிடம் மருத்துவமனை ஊழியர்கள், பிரசவம் பார்ப்பதற்கு குறைந்தபட்சம் ரூ.1500 கட்டாயப்படுத்தி வசூல் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வார்டுக்கு மாற்றுவதற்கு ஸ்ட்ரெச்சர் அல்லது சக்கர நாற்காலியை அழைத்து செல்வதற்கு தனித்தொகை கட்டாயமாக வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. எனவே கட்டாய வசூல் செய்யும் ஊழியர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

The post சேலம் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்கு ரூ.1500 வாங்கி கல்லா கட்டும் ஊழியர்கள் appeared first on Dinakaran.

Related Stories: