முத்துப்பேட்டையில் கள்ள சாராயம் காய்ச்சிய நபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

 

திருவாரூர், ஜூன் 11: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கள்ள சாராயம் காய்ச்சிய நபரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டத்தில் கள்ள சாராய விற்பனை மற்றும் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை போன்றவற்றை தடுக்கும் பணியில் மாவட்ட எஸ்.பி சுரேஷ்குமார் மேற்பார்வையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, கள்ள சாராய வியாபாரிகள் மற்றும் மது பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதுடன் குண்டர் சட்டத்திலும் கைது செய்து வருகின்றனர்.

இதையடுத்து முத்துப்பேட்டை போலீஸ் சரகம் தம்பிக்கோட்டை கீழக்காடு ஆண்டி கொல்லை பகுதியில் கள்ள சாராயம் காய்ச்சி விற்பனை செய்த செந்தில்குமார் (44) என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, திருத்துறைப்பூண்டி கிளை சிறையில் இருந்து வந்த நிலையில், அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு மாவட்ட எஸ்.பி சுரேஷ்குமார் பரிந்துரை செய்தார். பரிந்துரையின் பேரில், இதற்கான உத்தரவை லெக்டர் சாருஸ்ரீ நேற்று கவழங்கியதையடுத்து செந்தில்குமார் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு போலீசார் மூலம் திருச்சி மத்திய சிறைக்குகொண்டு சென்று அடைக்கப்பட்டார்.

மேலும் மாவட்டத்தில் இதேபோன்று கள்ள சாராய விற்பனை மற்றும் மது பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 11 நபர்கள் கடந்த 5 மாத காலத்தில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று எஸ்.பி. சுரேஷ்குமார் எச்சரித்துள்ளார்.

The post முத்துப்பேட்டையில் கள்ள சாராயம் காய்ச்சிய நபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது appeared first on Dinakaran.

Related Stories: