பைக் விபத்தில் இருவர் படுகாயம்

 

களக்காடு, ஜூன் 11: அம்பை அருகே ஊர்க்காடு வடக்குத்தெருவைச் சேர்ந்த மாரியப்பனின் மகன் முருகேஷ் (20). டிரைவரா இவர் நேற்று முன் தினம் வேலை முடிந்ததும் தனது பைக்கில் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அவரது பைக்கில் வடக்கு காருகுறிச்சியைச் சேர்ந்த சண்முகவேலின் மகன் இசக்கி என்பவரும் பயணித்தார். களக்காடு- சேரன்மகாதேவி சாலையில் உள்ள பத்மநேரி இசக்கியம்மன் கோயில் அருகே சென்ற போது, எதிரே நெடுவிளை தெற்குத் தெருவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் ரமேஷ் என்பவர் ஓட்டிவந்த பைக்கும், இவர்களது பைக்கும் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் முருகேஷ், இசக்கி ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து மீட்கப்பட்டதில் முருகேஷ் நெல்லை அரசு மருத்துவமனையிலும், இசக்கி சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து ரமேஷ் மீது களக்காடு இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பைக் விபத்தில் இருவர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: