தேவகோட்டை, ஜூன் 11: தேவகோட்டை தாலுகா கிளியூர் கிராமத்தை சேர்ந்த சின்னப்பன்(56),அவரது மனைவி சூசை மேரி(52). இவர்கள், தேவகோட்டை நோக்கி திருச்சி-ராமேஸ்வரம் பை பாஸ் சாலையில் டூவீலரில் வந்தனர். சிலாமேக வளநாடு என்ற இடம் அருகே வந்த போது தேவகோட்டை நோக்கி சென்ற லாரி மோதியது. இதில் கணவன்-மனைவி இருவரும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். உடன் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
The post லாரி மோதிய விபத்தில் தம்பதி படுகாயம் appeared first on Dinakaran.