செங்கல்பட்டு மாவட்ட சுய உதவி குழுக்களுக்கான கடனுதவி: கலெக்டர் ராகுல்நாத் தகவல்

செங்கல்பட்டு, ஜூன் 10: செங்கல்பட்டில் சுய உதவி குழுக்களுக்கான கடனுதவி திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என, கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன் சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. திட்டம் 1ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ₹1 லட்சத்து, 20 ஆயிரத்துக்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ₹98 ஆயிரத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். திட்டம் 2ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ₹8 லட்சத்திற்கும் மிகாமல் இருத்தல் வேண்டும்.

திட்டம் 1ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6% வட்டி விகிதத்திலும், அதிகபட்ச கடனாக ₹20 லட்சம், திட்டம் 2ன் கீழ் ஆண்களுக்கு 8% பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும் அதிக பட்ச கடனாக ₹30 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5% பெண்களுக்கு 4% வட்டி விகிதத்தில் அதிக பட்ச கடனாக ₹10 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. சுயஉதவிக் குழு கடன் நபர் ஒருவருக்கு ₹1 லட்சம் ஆண்டிற்கு 7% வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. திட்டம் 2ன் கீழ் ஆண்களுக்கு 8%, பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு ₹1 லட்சத்து, 50 ஆயிரம் கடன் வழங்கப்படுகிறது. மேலும், சிறுபான்மை மாணவ, மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை தொழிற்கல்வி, தொழில் நுட்ப கல்வி பயில்பவர்களுக்கு அதிகப்பட்ச மாக திட்டம் 1ன் கீழ் ₹20 லட்சம் வரையில் 3% வட்டி விகிதத்திலும் திட்டம் 2ன் கீழ் மாணவர்களுக்கு 8% மாணவியர்களுக்கு 5% வட்டி விகிதத்திலும் ₹30 லட்சம் வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.

எனவே, இம்மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம் மற்றும் திட்ட அறிக்கை, ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்பிக்கப்பட வேண்டும். கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும்போது, பள்ளி மாற்று சான்றிதழ், உண்மை சான்றிதழ் கல்வி கட்டணங்கள் செலுத்திய ரசீது, செலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் அகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post செங்கல்பட்டு மாவட்ட சுய உதவி குழுக்களுக்கான கடனுதவி: கலெக்டர் ராகுல்நாத் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: