செங்கோலை கையில் வைத்து கொண்டு நமது சரித்திரத்தை மாற்ற நினைப்பவர்கள் மீண்டும் ஒன்றிய அரியணை ஏறக்கூடாது

தென்காசி, ஜூன் 10: தென்காசியை அடுத்த சிவராமபேட்டையில் திமுக மாவட்ட துணை செயலாளர் கனிமொழியின் சர்வானந்த் இல்லத்தை நேற்று மாநில துணை பொது செயலாளர் கனிமொழி எம்பி திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமை வகித்தார். தனுஷ் குமார் எம்பி, மாவட்ட அவைத் தலைவர் மாவடிக்கால் சுந்தரமகாலிங்கம், மாவட்ட துணை செயலாளர்கள் தமிழ்ச்செல்வன், கென்னடி முன்னிலை வகித்தனர். முன்னாள் ஒன்றிய செயலாளர் காசிதர்மம் துரை வரவேற்றார். மாவட்ட பொருளாளர் ஷெரீப் தொகுத்து வழங்கினார்.

விழாவில் மாநில துணை பொது செயலாளர் கனிமொழி எம்பி பேசுகையில், ‘நமது இனத்தை, மொழியை, தமிழ்நாட்டு உரிமையை ஒரு குழுவாக, உறவாக, உணர்வாக உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் கருணாநிதி உடன் பிறப்பே என்று அழைத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த உணர்வை வளர்க்க பாடுபட்டு வருகிறார். சென்னையில் பொதுக்கூட்டத்தில் முதல்வர் பேசுகையில் வருகின்ற பாராளுமன்றத் தேர்தல் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது என்பதை தீர்மானிக்கும் தேர்தல். நாம் உருவாக்கிய கொள்கை, முன்னேற்ற பாதையில் செல்லும் தமிழ்நாடு, கல்வி அறிவு பெற்ற தமிழ்நாடு, நாம் பெற்ற வெற்றி, சாதனை ஆகியவற்றை நொறுக்கி விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படும் ஆட்சி மத்தியில் மீண்டும் வந்து விடக்கூடாது. நமது மொழி உணர்வு, சரித்திரம் ஆகியவற்றை தனதாக்கி மாற்றி எழுத வேண்டும் என்று நினைப்பவர்கள், ஒரு செங்கோலை கையில் வைத்துக் கொண்டு தமிழ்நாட்டையே கையில் வைத்திருப்பதாக நினைத்துக் கொள்பவர்கள் மறுபடியும் ஒன்றியத்தில் அரியணைக்கு வந்து விடக்கூடாது’ என்றார்.

விழாவில் மாவட்ட துணை செயலாளர் கனிமொழியின் குடும்பத்தினர் சரவணன், கண்ணன், ராணி, அஞ்சுகம், கார்த்திக், வானிலா, பிரியங்கா, தங்கமுத்து, ராணா, கவரா, ருத்ரா , வின்சிகன், சாய்சரண், கதிரவன், துரைச்சி, பூசைத்துரை, திமுக மாநில விவசாய அணி இணைச் செயலாளர் அப்துல் காதர், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செல்லத்துரை, முத்துப்பாண்டி, ஆறுமுகச்சாமி, ஷேக்தாவூது, ஜேசுராஜன், பொதுக்குழு உறுப்பினர்கள் சாமித்துரை, அருள், ரஹீம், ராஜேஸ்வரன், ரவிச்சந்திரன், சமுத்திரபாண்டி, கதிர்வேல் முருகன், தமிழ்ச்செல்வி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கேஎன்எல் சுப்பையா, ஒன்றிய செயலாளர்கள் சுரேஷ், ரவிசங்கர், அழகுசுந்தரம், திவான் ஒலி, சீனித்துரை, ஜெயக்குமார், மகேஷ் மாயவன், அன்பழகன், சிவன்பாண்டியன், நகர செயலாளர்கள் சாதீர், வெங்கடேசன், ஜெயபாலன், அப்பாஸ், மாவட்ட கவுன்சிலர்கள் சந்திரலீலா, மாரிமுத்து, தேவி, சுதா, ராஜா தலைவர், பூங்கொடி, உதயகிருஷ்ணன், சாக்ரடீஸ், முத்துலட்சுமி, சுப்பிரமணியன், சுதா, மைதீன் பீவி, யூனியன் சேர்மன்கள் சுப்பம்மாள், திருமலைச்செல்வி, ஷேக் அப்துல்லா, திவ்யா, காவேரி, நகர்மன்ற தலைவர்கள் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், ராமலெட்சுமி, பேரூர் செயலாளர்கள் சுடலை, குட்டி, முத்தையா, பண்டாரம், ஜெகதீசன், முத்து, ராஜராஜன், வெள்ளத்துரை, உசேன், சிதம்பரம், யூனியன் துணைத்தலைவர் ஐவேந்திரன் தினேஷ், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட துணை செயலாளர் சிவஅருணன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் வேலுச்சாமி, கோமதிநாயகம், இஞ்சி இஸ்மாயில், கருப்பண்ணன், இசக்கிப்பாண்டியன், வீராணம் சேக்முகமது, ஷமீம்இப்ராஹிம், ரமேஷ், ஜபருல்லாகான், பரமசிவன், அணி துணை அமைப்பாளர்கள் முருகன், கண்ணன், ஹக்கீம், பாலாமணி, ராஜேந்திரன், தங்கபாண்டியன், ஜீவானந்தம், சுரேஷ், மூவன்னா மசூது, பொரோஸ்கான், பிஎஸ் மாரியப்பன், மோகன், சண்முகநாதன், மாரியப்பன் கருணாநிதி, விஸ்வாசெல்லப்பா, கஜேந்திரன், மோகன்ராஜ், வெங்கடேசன், மாரியப்பன், இன்பராஜ், சீத்தாராமன், சிஎம்குமார், முன்னாள் அறங்காவலர் வீரபாண்டியன், குத்துக்கல்வலசை காசிகிருஷ்ணன், பேரூராட்சி மன்ற தலைவர்கள் சுந்தர்ராஜன், வேணி, சின்னத்தாய், காளியம்மாள் செல்வக்குமார், சீதாலெட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் வேலுச்சாமி, சத்யராஜ், இசக்கிப்பாண்டியன், செல்வம், ஒன்றிய துணை செயலாளர்கள் வாசுதேவன், ஐடிஐ ஆனந்தன், ஆனந்தராஜ், தங்கபாண்டியன், காளிராஜ், ராமராஜ், கவுன்சிலர்கள் கிருஷ்ணராஜா, தர், முகைதீன் கனி, ராமர், அழகுதுரை, ஒன்றிய கவுன்சிலர்கள் பகவதியப்பன், கீதாமணிகண்டன், மாரியம்மாள், மாரிச்செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர். சிவராம பேட்டை உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற தலைவர் நடராஜன், செயலாளர் கார்த்திக், பொருளாளர் சரவணன் நன்றி கூறினர். ஏற்பாடுகளை சக்கம்மாள் துரை-கனிமொழி, கார்த்திக்- தங்கமுத்து, துரை – சசிகலா தேவி குடும்பத்தினர் செய்திருந்தனர்.

The post செங்கோலை கையில் வைத்து கொண்டு நமது சரித்திரத்தை மாற்ற நினைப்பவர்கள் மீண்டும் ஒன்றிய அரியணை ஏறக்கூடாது appeared first on Dinakaran.

Related Stories: