5 ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகம் வட்ட வழங்கல் அலுவலர் நடவடிக்கை

திருவிடைமருதூர், ஜூன் 9: தினகரன் செய்தி எதிரொலியாக திருவிடைமருதூர் வட்டம் திருப்பனந்தாள் அருகே கோணுலாம்பள்ளம் பகுதியில் உள்ள 5 ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைகளுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டன. கோணுலாம்பள்ளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நிர்வாகத்திற்குட்பட்ட வேட்டமங்கலம், குலசேகரநல்லூர், திட்டச்சேரி, மரத்துறை, சரபோஜி ராஜபுரம் ஆகிய 5 கிராமங்களில் பொது விநியோக அங்காடிகள் உள்ளன. இதன் மூலம் சுமார் 4000 குடும்ப அட்டைதாரர்கள் உணவு பொருட்களை வாங்கி பயன்பெறுகின்றனர்.

இந்நிலையில் கடந்த 3ம்தேதி முதல் 7ம்தேதி வரை 5 நாட்களாக குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கவில்லை என்ற புகார் எழுந்தது. இது தொடர்பாக தஞ்சை கலெக்டருக்கு 5 கிராம மக்கள் தெரிவித்த புகாரின் பேரில் தினகரனில் நேற்று செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து திருவிடைமருதூர் வட்ட வழங்கல் அலுவலர் மனோரஞ்சிதம் 5 பொது வினியோக அங்காடிகளுக்கும் சென்று விசாரணை செய்தார். அதன் பிறகு நேற்று முன்தினம் மற்றும் நேற்று 2வது நாளாக ரேஷன் கடைக்கு வந்த சுமார் 750 குடும்ப அட்டைதாரர்களுக்கு உரிய உணவு பொருட்கள் வழங்கப்பட்டன என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

The post 5 ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகம் வட்ட வழங்கல் அலுவலர் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: