பொலிவுபெறும் பள்ளி வகுப்பறைகள் அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில்

அரியலூர், ஜூன் 9: 2023ம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்படுவதால், அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்ட கலெக்டர் வளாகத்தில் மகளிர் சுய உதவிக் குழக்கள் மூலம் சிறுதானிய உணவகம் அமைத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்திய வேளாண்மையில் முதன்மையாக விளங்க கூடிய சிறுதானியங்கள் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதுடன் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்கின்றன. தமிழ்நாடு அரசு சிறுதானிய உணவு வகைகளை பிரபலப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் சிறுதானிய உணவகம் அமைத்திட கீழ் கண்ட நிபந்தனைகளுடன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிபந்தனைகள்: சிறு தானிய உணவகம் நடத்திட விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள், உற்பத்தியாளர் குழுக்கள், கூட்டமைப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மகளிர் குழு துவங்கப்பட்டு குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் முடிவுற்றிறுக்க வேண்டும். NRLM MIS இணையதளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். கூட்டமைப்பாக இருக்கும் பட்சத்தில் தரமதிப்பீடு செய்யப்பட்டு A அல்லது B சான்று பெற்றிருக்க வேண்டும். உற்பத்தியாளர் குழுவாக இருக்கும் பட்சத்தில் தரமதிப்பீடு செய்யப்பட்டு திட்ட நிதி பெறப்பட்டிருக்க வேண்டும். மகளிர் சுய உதவிக் குழு மற்றும் உற்பத்தியாளர் குழு, கூட்டமைப்பு சிறுதானிய உணவு உற்பத்தி மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பில் ஆர்வம் மற்றும் முன் அனுபவம் உடையவராக இருத்தல் வேண்டும். மாவட்ட கலெக்டர் தலைவர் பெருந்திட்ட வளாகம் அமைந்துள்ள அல்லது அதனை சுற்றியுள்ள ஊராட்சியின் மகளிர் சுய உதவிக் குழு, உற்பத்தியாளர் குழு, கூட்டமைப்பு மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்.

இது குறித்த விரிவான விவரங்களை அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அறை எண்:215ல் செயல்படும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தை நேரில் அனுகலாம் என மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

The post பொலிவுபெறும் பள்ளி வகுப்பறைகள் அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் appeared first on Dinakaran.

Related Stories: