200 கிமீ தூரத்துக்கு மேல் இயக்கப்படும் அரசு பஸ்களில் முன்பதிவு வசதி அறிமுகம்

நெல்லை, ஜூன் 9: அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் 200 கிமீ தூரத்துக்கு மேல் இயக்கப்படும் அரசு பஸ்களில் முன்பதிவு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நீண்ட தூரங்களுக்கு அரசு விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் சென்னை, கோவை, திருச்சி, ஈரோடு, கும்பகோணம், வேலூர், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, வேளாங்கண்ணி, திருப்பதி, பெங்களூர், திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களுக்கு குளிரூட்டப்பட்ட படுக்கை வசதி, அமர்ந்து செல்லும் வசதி, குளிர்சாதன வசதியில்லாத அல்ட்ரா டீலக்ஸ் பஸ்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் முன்பதிவுகள் மூலம் இயக்கப்படுகின்றன.

விரைவு பஸ்களில் முன்பதிவில்லாத சாதாரண கட்டணத்திலும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுபோல் அரசு போக்குவரத்து கழகம் சென்னை, கோவை, சேலம், கும்பகோணம், மதுரை, நெல்லை உள்பட 8 கோட்டங்கள் மூலம் சுமார் 20 ஆயிரம் பஸ்கள் தினமும் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இதில் 200 கிமீ தூரத்துக்கு மேல் மதுரையில் இருந்து கொடைக்கானல், கேரள மாநிலம் கொல்லம், மூணாறு, நாகர்கோவில், சேலம், திருவண்ணாமலை, சேலத்திலிருந்து பெங்களூரு, காஞ்சிபுரம், மதுரை, திருவாரூர், ஈரோட்டிலிருந்து பெங்களூர், குமுளி, மைசூர், புதுச்சேரி, ராமேஸ்வரம், திருச்செந்தூர், ஓசூரிலிருந்து சென்னை, கடலூர், புதுச்சேரி, திருச்சி, மதுரை, ஊட்டியிலிருந்து பெங்களூர், கண்ணனூர், கோழிக்கோடு, மைசூர், பாலக்காடு, பழனியிலிருந்து கடலூர், நெய்வேலி, ராமஸே்வரம், திருச்செந்தூர், விழுப்புரம், கன்னியாகுமரி, சிவகாசியிலிருந்து ஈரோடு, மேட்டுப்பாளையம், சேலம், திருப்பூர், மற்றும் திருநெல்வேலியில் இருந்து சேலம், கோவை, கோயம்புத்தூர் போன்ற முக்கிய நகரங்களில் இருந்து பயணிக்கும் பயணிகளின் வசதிகைய கருதி முன்பதிவு சேவை விரிவுபடுத்தப்படுகிறது.

இதன்காரணமாக தினமும் முன்பதிவு செய்து பயணிக்கும் இருக்கைகளின் வசதி 51,046ல் இருந்து 62,464 இருக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. சுமார் 11,418 இருக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால் முன்பதிவின் மூலம் கூடுதல் பயணிகள் பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகளும் நெருக்கடியின்றி முன்பதிவு செய்து பயணிக்கலாம். இதற்கான முன்பதிவுகளை பயணிகள் வழக்கமாக பயன்படுத்தும் முன்பதிவு இணைய தளமான tnstc.in மற்றும் tnstc செல்போன் ஆப் மூலமும் பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என அரசு போக்குவரத்து கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post 200 கிமீ தூரத்துக்கு மேல் இயக்கப்படும் அரசு பஸ்களில் முன்பதிவு வசதி அறிமுகம் appeared first on Dinakaran.

Related Stories: