வேதாரண்யம் நகராட்சியில் குறைகளை தெரிவிக்க தானியங்கி செல்போன் சேவை துவக்கம்

வேதாரண்யம், ஜூன் 8: வேதாரண்யம் நகராட்சியில் சிறப்பு செல்போன் அழைப்பு சேவை துவங்கப்பட்டது.வேதாரண்யம் நகராட்சி உட்பட்ட 21 வார்டுகளில் பொதுமக்கள் குடிநீர், தெரு விளக்கு, தூய்மை பணிகள் உள்ளிட்ட புகார்களை தெரிவிக்க நகராட்சி வரவேற்கும் குரல் தானியங்கி புகார் சேவை மையம் திறக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர மன்ற தலைவர் புகழேந்தி, சேவை மையத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் இடம் உள்ளதா துணைத் தலைவர் மங்களநாயகி மற்றும் நகராட்சி உறுப்பினர்கள் நகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த தானியங்கி புகார் சேவை பொதுமக்கள் 9090545436 என்ற எண்ணில் தொலைபேசி மூலம் புகார் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்கலாம். செல்போன் சேவையை தொடர்பு கொண்டு தானியங்கி புகார் சேவை மைய அதிகாரி தொடர்பு கொண்டு நம்பர் ஒன்றை அழுத்தினால், குடிநீர் பிரச்னைகளும் 2 தெருவிளக்கு மூன்று தூய்மை பணி நாலு அனைத்து வரிகள் 5 பிறப்பு இறப்பு சான்றிதழ் 6 கட்டுமானம் அனுமதி மற்றும் ஆக்கிரமைப்பு அகற்றல் 7 இதர சேவைகள் குளித்து தங்களது புகார்களை பதிவு செய்யலாம்.புகார்கள் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு சரி செய்யப்படும் என நகராட்சி ஆணையர் ஹேமலதா தெரிவித்தார்.

The post வேதாரண்யம் நகராட்சியில் குறைகளை தெரிவிக்க தானியங்கி செல்போன் சேவை துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: