ஆடல்-பாடலுக்கு அனுமதி கோரி மனு செய்தால் அபராதம்: ஐகோர்ட் கிளை எச்சரிக்கை

மதுரை: ஆடல்-பாடலுக்கு அனுமதி கோரி மனு செய்தால் அபராதம் விதிக்கப்படும் என ஐகோர்ட் கிளை எச்சரித்துள்ளது. கரூர் மாவட்டம், கடவூர் சிந்தாமணிப்பட்டியில் ேகாயில் திருவிழாவை முன்னிட்டு ஆடல்-பாடல் கலை நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி பெரியசாமி என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் கோயில் திருவிழாவில் ஆடல்-பாடல் கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரி பொது நல வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்றும், மனுவின் மீது போலீசார் 7 நாளில் முடிவெடுக்க வேண்டுமென்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதை பின்பற்றாமல் தொடர்ச்சியாக அனுமதி ேகாரி மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. இனிமேல் ஆடல்-பாடலுக்கு அனுமதி கோரி மனு செய்தால் அதிக அபராதத்துடன் மனு தள்ளுபடி செய்யப்படும் என எச்சரித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.

The post ஆடல்-பாடலுக்கு அனுமதி கோரி மனு செய்தால் அபராதம்: ஐகோர்ட் கிளை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: