காதலித்ததை தந்தை கண்டித்ததால் சகோதரிகள் கிணற்றில் குதித்து தற்கொலை

*திருச்சி அருகே விபரீதம்

துவரங்குறிச்சி : திருச்சி அருகே காதலை தந்தை கண்டித்ததால் சகோதரிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே அயன் புதுப்பட்டியை சேர்ந்தவர் பிச்சை (65). கட்டிட தொழிலாளி. இவருக்கு 3 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர். இதில் வித்யா (21), காயத்ரி (20). இவர்கள் இருவரும் காங்கேயத்தில் உள்ள தனியார் பஞ்சாலையில் வேலை பார்த்து வந்தனர்.

திருவிழாவிற்காக கடந்த 5-ம் தேதி இருவரும் புதுப்பட்டிக்கு வந்தனர். இந்நிலையில் நேற்று காலை வீட்டை விட்டு சென்ற இருவரும் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து குடும்பத்தினர் அவர்களை தேடியபோது, அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் இருவரது உடல்கள் மிதந்தது தெரிய வந்தது. தகவலறிந்த துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரது உடல்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வளநாடு போலீசார் , இருவரது உடல்களை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதில் முதற்கட்ட விசாரணையில், பஞ்சாலையில் வேலை செய்த இரண்டு பேரை, அவர்கள் காதலித்து வந்திருக்கின்றனர். இதையறிந்த தந்தை இரண்டு மகள்களை கண்டித்துள்ளார். இதனால் மனமடைந்த இருவரும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
தற்கொலைக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post காதலித்ததை தந்தை கண்டித்ததால் சகோதரிகள் கிணற்றில் குதித்து தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: