வழக்கு விவரங்கள் தெரிந்த போலீசாரை மட்டுமே நீதிமன்றம் அனுப்ப காவல்துறைக்கு அறிவுறுத்த வேண்டும்: தலைமை குற்றவியல் வழக்கறிஞருக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: வழக்கு விவரங்கள் தெரிந்த போலீசாரையே நீதிமன்றத்துக்கு அனுப்ப வேண்டுமென்ற அறிவுறுத்தலுக்கு காவல்துறை செவிமடுக்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஜாமீன் மனு மீது விசாரணை நடந்தது. அப்போது, வழக்கு தொடர்பான விவரங்களை தெரிவிப்பதற்காக ஆஜராகியிருந்த காவலர் முறையான தகவல்களை வழங்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தார். இதையடுத்து, நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ஏற்கனவே பலமுறை இதே நிலையை நீதிமன்றம் சந்தித்து உள்ளது.

இதனால் நீதிமன்றத்தின் நேரம்தான் வீணாகிறது. வழக்கு தொடர்பான தகவல்கள் தெரிந்த காவலர்கள் அல்லது அதிகாரிகளை மட்டுமே அரசுத் தரப்பு வழக்கறிஞர்களுக்கு விவரங்களை தெரிவிக்க அனுப்பும்படி டிஜிபியிடம் அறிவுறுத்த வேண்டும் என்று மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞரிடம் பலமுறை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதற்கு அவர் முயற்சி எடுத்தும் காவல்துறை விசாரணை அமைப்புகள் அதற்கு செவிமடுக்கவில்லை. முழுமையான தகவல்களுடன் தான் நீதிமன்ற விசாரணைக்கு வர வேண்டும் என்று காவல் துறையினருக்கு உத்தரவிடும்படி அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னாவுக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா அறிவுறுத்தியுள்ளார்.

The post வழக்கு விவரங்கள் தெரிந்த போலீசாரை மட்டுமே நீதிமன்றம் அனுப்ப காவல்துறைக்கு அறிவுறுத்த வேண்டும்: தலைமை குற்றவியல் வழக்கறிஞருக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: