சமூகநலம் மற்றும் பெண்கள் அதிகாரமளிப்பு துறை இயக்குனராக பணியாற்றி வந்த டி.ரத்னா, மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். ராமநாதபுரம் கூடுதல் கலெக்டராக(வளர்ச்சி) பணியாற்றி வரும் கே.ஜே.பீரவின்குமார், மதுரை மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மாநகராட்சி கமிஷனராக பணியாற்றி வரும் சிம்ரன்ஜீத் சிங் காலோன், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய செயல் இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். சேலம் மாவட்ட கூடுதல் கலெக்டராக(வளர்ச்சி) பணியாற்றி வரும் எஸ்.பாலசந்தர், சேலம் மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
The post போக்குவரத்து துறை செயலாளர் பணீந்திர ரெட்டிக்கு கூடுதல் பொறுப்பு ஐஏஎஸ் அதிகாரிகள் 7 பேர் மாற்றம்: அரசு உத்தரவு appeared first on Dinakaran.