கலெக்டர் தொடங்கி வைத்தார் ராஜகோரி இடுகாட்டில் குளிக்கும் இடம் சுத்தம்

தஞ்சாவூர், ஜூன் 6: தினகரன் செய்தி எதிரொலியாக தஞ்சாவூர் ராஜகோரி இடுகாட்டில் சுகாதாரமற்று இருந்த பொதுமக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தப்படும் இடம் சுத்தம் செய்யப்பட்டது. தஞ்சாவூரில் ராஜகோரி இடுகாடு உள்ளது. தஞ்சை நகரில் இறந்தவர்களின் உடல் தகனம் செய்யப்படும் இந்த இடம் தஞ்சை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது. தஞ்சாவூர் மாநகராட்சி மேயராக சண்.ராமநாதன் பொறுப்பேற்ற பின்னர் இறந்தவர்களின் உடலை கட்டணம் வசூலிக்காமல் இலவசமாக தகனம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அந்த இடம் முறையாக பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அங்கு இறுதி சடங்கு செய்யும் நபர்கள் குளிப்பதற்கு என்று தனியிடம் உள்ளது. அங்கு குளிப்பதற்காக பயன்படுத்தப்படும் தண்ணீர் குழாய்களை சமூக விரோதிகள் உடைத்ததால் மூன்று நாட்களாக இறுதி சடங்கு செய்ய வரும் பொதுமக்கள் குளிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.

அந்த இடத்தில் உள்ள குழாய்கள் அனைத்தும் உடைக்கப்பட்டு பயன்படுத்த முடியாத நிலையில் தண்ணீரும் தேங்கி நின்று சாக்கடை போல் இருந்தது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த இடத்தை சுத்தம் செய்து அத்துமீறி உள்ளே வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து தினகரனில் செய்தி வெளியானது.

இந்நிலையில் நேற்று அந்த பகுதி முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. தேங்கி நின்ற தண்ணீரும் வடிந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து செய்தி வெளியிட்ட தினகரன் நிர்வாகத்தினருக்கும், நடவடிக்கை எடுத்த மாநகராட்சி அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் பாராட்டும், நன்றியும் தெரிவித்தனர்.

The post கலெக்டர் தொடங்கி வைத்தார் ராஜகோரி இடுகாட்டில் குளிக்கும் இடம் சுத்தம் appeared first on Dinakaran.

Related Stories: