மறைமலைநகரில் ரூ.45 லட்சம் மதிப்பிட்டில் அங்கன்வாடி மையம்: கலெக்டர் துவக்கிவைத்தார்

 

செங்கல்பட்டு:மறைமலைநகரில்,அங்கன்வாடி மையங்களை கலெக்டர் ராகுல்நாத், துவக்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகராட்சியில், தன்னார்வ தொண்டு நிறுவனம் பெங்களூர் யூனைடெட் வே மற்றும் புளோசர்வ் நிறுவனம் மூலம் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் நின்னக்கரை, பனங்கோட்டூர் பகுதிகளில் புதிய அங்கன்வாடி மையங்கள் மற்றும் திருக்கச்சூரில் புதுப்பிக்கப்பட்ட அங்கன்வாடி மையங்கள் என மூன்று அங்கன்வாடி மையங்களை நேற்று மாவட்ட ஆட்சித் தலைவர் ராகுல்நாத், துவக்கி வைத்தார்.

மறைமலை நகராட்சிக்குட்பட்ட நின்னக்கரையில், புதியதாக துவக்கி வைக்கப்பட்ட அங்கன்வாடி மைய வளாகத்தில், கலெக்டர் ராகுல்நாத், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் நேற்று மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இதில், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சற்குணா, மறைமலைநகர் நகராட்சி மண்டல நிர்வாக இயக்குநர் சசிகலா, மறைமலைநகர் மன்றத் தலைவர் ஜெ.சண்முகம், துணைத் தலைவர் சித்ரா கமலக்கண்ணன், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post மறைமலைநகரில் ரூ.45 லட்சம் மதிப்பிட்டில் அங்கன்வாடி மையம்: கலெக்டர் துவக்கிவைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: