பெரம்பலூரில் மாவட்ட காவல்துறை சார்பில் ஹேப்பி சண்டே, ஹேப்பி ஸ்ட்ரீட்

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில் பெரம்பலூரில் நேற்று ஹேப்பி சண்டே, ஹேப்பி ஸ்ட்ரீட் எனப்படும் மகிழ்ச்சியான ஞாயிறு, மகிழ்ச்சியான தெரு என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளாதேவி உத்தரவி ன்படி, பெரம்பலூர் நகரில் வசிக்கும் பொதுமக்களின் விடுமுறை நாளான ஞாயி ற்றுக் கிழமையை பயனுள் ளதாகவும், மகிழ்ச்சியாக வும் கொண்டாடும் வகையில், பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பாக நேற்று( 4ம் தேதி) பெரம்பலூரில், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒன்றான வெ ங்கடேசபுரத்தில் ஹேப்பி சண்டே,ஹேப்பி ஸ்ட்ரீட் என ப்படும் மகிழ்ச்சியான ஞா யிறு மகிழ்ச்சியான தெரு என்ற நிகழ்ச்சி பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி தலைமையில் நடை பெற்றது.

நிகழ்ச்சியில் பெரம்ப லூர் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களின் நேரத்தை பயனுள்ளதான தாக மாற்றும் வகையில் பாரம்பரிய கலை நிகழ்ச்சி களான தப்பாட்டம், சிலம்பா ட்டம், மான்கொம்பு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளும், காவல்துறையின் வாத்திய குழு மூலம் இன்னிசை நிக ழ்ச்சியும், ஆடல் பாடல் நிக ழ்ச்சியும் நடத்தப்பட்டது.

மே லும் இந்த நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகளின் மூல மாக மதுவினால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் போதை பழக்கங்களில் அடிமையா குவதை தவிர்க்குமாறு வி ழிப்புணர்வு பொது மக்க ளிடம் ஏற்படுத்தப்பட்டது. மேலும் சாலை விதிகளை பின்பற்றுவது குறித்தும், போக்குவரத்து விதிகள் குறித்தும் விழிப்புணர்வு நடத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக நடனம் ஆடினர்.

சென்னை, கோவை போன்ற பெரு நக ரங்களில் மட்டுமே நடைபெ ற்று வந்த, மகிழ்ச்சியான தெருஎன்ற நிகழ்ச்சிகள் நேற்று பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி பொதுமக்களுக்கும் காவல் துறைக்குமிடையே நல்லு றவை வளர்க்க வேண்டும் என்று எடுக்கபட்ட்ட முயற்சி யினாலும் பெரம்பலூர் மா வட்ட காவல்துறை சார்பில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிகழ்ச்சி பொது மக்களிடம் மிகப்பெ ரிய வரவேற்ப்பைப் பெற்றுள்ளது.

நிகழ்ச்சியில் பெரம்ப லூர் மாவட்ட ஏடிஎஸ்பிகள் (தலைமையிடம்) மதியழ கன்,(மதுவிலக்கு அமலா க்க பிரிவு)வேல்மணி, டிஎஸ் பிக்கள் (பெரம்பலூர் உட் கோட்டம்) பழனிச்சாமி, (மங் களமேடு உட்கோட்டம்) சீரா ளன் மற்றும் போலீஸ் இன் ஸ்பெக்டர்கள், சப்.இன்ஸ் பெக்டர்கள், ஏட்டுகள், காவ லர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

The post பெரம்பலூரில் மாவட்ட காவல்துறை சார்பில் ஹேப்பி சண்டே, ஹேப்பி ஸ்ட்ரீட் appeared first on Dinakaran.

Related Stories: