புதுகை அருகே சுவாரஸ்யம்; ‘மீம்ஸ்’களால் திருமண வாழ்த்து பேனர்: வீடியோ வைரல்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள சுக்காம்பட்டியை சேர்ந்தவர் மதி. பொறியியல் பட்டதாரி. இவருக்கும் திருச்சியை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான ஷாலினி என்பவருக்கும் சுக்காம்பட்டியில் இன்று (4ம் தேதி) திருமணம் நடந்தது. இதற்காக அவரது நண்பர்கள் வித்தியாசமான முறையிலும், அனைவரையும் கவரும் வகையிலும் மண்டபத்தின் முன் திருமண வாழ்த்து பேனர் வைத்திருந்தனர்.

அந்த பேனர் மீம்ஸ்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அந்த மீம்ஸ்களில் மாப்பிள்ளை பெண் பார்க்க செல்வது முதல் திருமணம் முடிந்த பின் நடைபெறும் நிகழ்வுகள் வரை சமூக வலைதளங்களில் வெளியான திருமணம் தொடர்புடைய மீம்ஸ்களை ஒவ்வொன்றாய் வரிசைப்படுத்தி மீம்ஸ் படங்களுடன் அச்சிட்டு வைக்கப்பட்டிருந்தது. இந்த வித்தியாசமான வாழ்த்து பேனரை திருமணத்துக்கு வந்திருந்த பொதுமக்கள் பார்த்து சென்றனர். மேலும் இந்த பேனர், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post புதுகை அருகே சுவாரஸ்யம்; ‘மீம்ஸ்’களால் திருமண வாழ்த்து பேனர்: வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Related Stories: