ராயக்கோட்டை பகுதியில் கத்தரிக்காய் விளைச்சல் அதிகரிப்பு

*விவசாயிகள் ஆர்வம்

ராயக்கோட்டை : ராயக்கோட்டையில், கத்தரிக்காய் விளைச்சல் அதிகரித்த நிலையில், அறுவடை மற்றும் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை பகுதியில் ஏராளமான விவசாயிகள் கத்தரிக்காயை விளைச்சல் செய்துள்ளனர்.

இப்பகுதியில் விவசாய சாகுபடிகளுக்கான நல்ல சீதோஷ்ணம் நிலவுவதால், கத்தரிக்காய் தரமானதாக உள்ளது. தற்போது, ராயக்கோட்டை பகுதியில் அதிக பனிப்பொழிவால் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதித்துள்ளது.

அதோடு அனைத்து சமயங்களிலும் தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால், மாற்று சாகுபடியான காய்கறிகளை விளைச்சல் செய்வதில், விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். அதனால், ஏற்கெனவே தக்காளி விளைச்சல் செய்து வந்த விவசாய நிலங்களில், இப்போது கத்தரிக்காய் தோட்டங்களை உருவாக்கியுள்ளனர்.

கத்தரிக்காயில் சிறிய ரகம், குண்டு ரகம் மற்றும் வயலட் கலர் என விளைச்சலான நிலையில், பெரும்பாலான விவசாயிகள் ஒயிட்லாங் எனும் நீளமாக வளரும் வெளீர் பச்சைக் கலர் கத்தரிக்காயை அதிக அளவில் விளைச்சல் செய்துள்ளனர். இந்த செடி ஆள் உயரத்திற்கு வளருவதாகவும், மாதக்கணக்கில் பலனளிப்பதாகவும் கூறுகின்றனர்.

கத்தரிக்காயை தமிழக நகர்களுக்கும், அதிக அளவில் கேரளாவிற்கும் ஏற்றுமதியாகும் கத்தரிக்காயை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர். கத்தரிக்காய் விற்பனைக்கென்றே ராயக்கோட்டை அடுத்த காடுசெட்டிப்பட்டியில், தனியாக மார்க்கெட் உள்ளது. தற்போது கத்தரிக்காய் கிலோ ரூ.30க்கு விற்பனையாவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

Related Stories: