அரசு கல்லூரியில் 1644 இடத்திற்கு 14,250 பேர் விண்ணப்பம்

தர்மபுரி, ஜூன் 3: தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் 6500 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இளநிலை, முதுநிலை பாடப்பிரிவுகள் 18 உள்ளன. ஆராய்ச்சி படிப்புகளும் 6 வகை உள்ளன. இக்கல்லூரியில் பிஎஸ்சி கணிதம், பிஎஸ்சி வேதியியல், இயற்பியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல், தாவரவியல், புள்ளியியல், விலங்கியல், கணினி, பி.காம் கூட்டுறவு, வணிகவியல், வணிகவியல் கணினி பயன்பாடு (சிஏ), பிபிஏ வணிக நிர்வாகவியல், அறிவியல், பிஏ தமிழ், பிஏ ஆங்கிலம், பிஏ வரலாறு ஆகிய இளங்கலை பாடப்பிரிவுகளில், 2 ஷிப்ட் அடிப்படையில் பாடம் நடத்தப்படுகிறது. இக்கல்லூரியில் பிஎஸ்சி கணிதம், பிஎஸ்சி வேதியியல், பிஎஸ்சி இயற்பியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல், தாவரவியல், புள்ளியியல், விலங்கியல், கணினி, பி.காம் கூட்டுறவு, பி.காம் வணிகவியல், வணிகவியல் கணினி பயன்பாடு (சிஏ), பிபிஏ வணிக நிர்வாகவியல், அறிவியல், பிஏ தமிழ், ஆங்கிலம், வரலாறு ஆகிய இளங்கலை பாடப்பிரிவுகளில் 2 ஷிப்ட் அடிப்படையில் பாடம் நடத்தப்படுகிறது.

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த மாதம் 8ம் தேதி பிளஸ்2 தேர்வு முடிவு வெளியானதில், மாணவ, மாணவிகள் 92.72 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். இதில் தேர்ச்சி பெற்ற பல மாணவர்கள் தர்மபுரி அரசு கலை அறிவியல் கல்லூரி மற்றும் பென்னாகரம், பாலக்கோடு, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், ஏரியூர் அரசு கலைக்கல்லூரியில் பட்டப் படிப்புகளில் சேர்வதற்கு போட்டி போட்டுக்கொண்டு விண்ணப்பித்துள்ளனர். ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். இதில் தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில், 14,250 பேர் சேர்க்கைக்காக விண்ணப்பித்துள்ளனர். இளங்கலை, அறிவியல் பாடப் பிரிவுகளில் மொத்தம் 1,644 இடங்கள் மட்டுமே உள்ளது. ஒரு இடத்திற்கு 11 பேர் என்ற கணக்கில் விண்ணப்பித்துள்ளனர். தற்போது ஒற்றை சாளர முறையில், மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் நடக்கிறது. ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து, வரும் 9ம் தேதி வரை கவுன்சலிங் நடக்கிறது.

இன்று (3ம் தேதி) மொழிப்பாடங்கள் மற்றும் கலைத்துறை பாடப்பிரிவுகளுக்கு கவுன்சிலிங் நடக்கிறது. தர்மபுரி மாவட்டத்தில் வேதியியல், தமிழ், வரலாறு, அரசியல் வரலாறு ஆகிய பாடப்பிரிவுகளை மாணவர்கள் தேர்வு செய்கின்றனர். தர்மபுரி மாவட்டத்தை பொறுத்தவரை, வேதியியில், தமிழ், வரலாறு, அரசியல் வரலாறு, விசுவல் கம்யூனிகேஷன் பாடப்பிரிவுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளனர். இதுபோக இயற்பியல், கணிதம் பாடப்பிரிவு தேர்வு செய்துள்ளனர். இதுகுறித்து தர்மபுரி அரசுகலைக்கல்லூரி முதல்வர் கிள்ளிவளவன் கூறியதாவது: மதிப்பெண் ரேங்க் அடிப்படையில் தான், மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது. சென்னை கல்லூரிகளின் இயக்குனரிடம் இருக்கும் ரேங்க் பட்டியலின் படி தான் மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது. கவுன்சிலிங் மூலம் தேர்வு செய்யும் மாணவர்களை, சென்னையில் இருந்தபடியே இயக்குனர் தணிக்கை செய்துக்கொள்ளுவார். தர்மபுரி அரசு கலைக்கல்லூரியை பொறுத்தவரையில், மொத்தமுள்ள 1644 இடங்களுக்கு, 14,250 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஒரு இடத்திற்கு 11 பேர் போட்டியில் உள்ளனர். மதிப்பெண் அடிப்படையில் தான் மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post அரசு கல்லூரியில் 1644 இடத்திற்கு 14,250 பேர் விண்ணப்பம் appeared first on Dinakaran.

Related Stories: