தமிழ்நாட்டில் முதல்முறையாக சேலத்தில் 12 மணி நேரம் இயங்கும் தபால் நிலையம்

சேலம்: தமிழ்நாட்டில் முதன் முறையாக பகல் 12 மணி நேரமும் செயல்படும் வகையில் சேலம் சூரமங்கலம் தபால்நிலையம் இன்று (3ம் தேதி) முதல் செயல்பாட்டிற்கு வருகிறது. காலை 8 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அனைத்து சேவைகளும் இத்தபால் நிலையத்தில் மக்களுக்கு வழங்கப்படவுள்ளது. வங்கி பரிவர்த்தனை சேவைகளான சேமிப்பு கணக்கு, தொடர் வைப்பு கணக்கு, செல்வமகள் சேமிப்பு திட்டம், பொது வருங்கால வைப்பு கணக்கு, குறித்த கால வைப்பு கணக்கு (டிடி 1, 2, 3 மற்றும் 5 ஆண்டுகள்), மூத்த குடிமக்கள் சேமிப்பு கணக்கு, மாதாந்திர வருமான கணக்கு, அடல் பென்சன் திட்டம், அஞ்சல் காப்பீட்டு பரிவர்த்தனைகள், தபால் சேவையில் பதிவு தபால், விரைவு தபால், பார்சல் சேவை, அயல்நாட்டு தபால் சேவை, விபிஎல், விபிபி தபால் சேவை, மணியார்டர் சேவை வழங்கப்படுகிறது.

The post தமிழ்நாட்டில் முதல்முறையாக சேலத்தில் 12 மணி நேரம் இயங்கும் தபால் நிலையம் appeared first on Dinakaran.

Related Stories: