திருவட்டாறு ஆதிகேசவபெருமாள் கோயில் சொத்து: அறிக்கை தர ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

மதுரை: திருவட்டாறு ஆதிகேசவபெருமாள் கோயிலில் தற்போது உள்ள நகைகள் மற்றும் சொத்துக்கள் குறித்து அறிக்கை தர ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தங்க சிவலிங்கம், பஞ்சலோக சிலைகள், பழைய கலசம், தங்க நகைகளை அதன் பழைய இடத்தில் வைக்க மனுதாக்கல் செய்யப்பட்டது.

ஆதிகேசவ பெருமாள் கோயிலில் 1992-க்கு முன்பு எவ்வளவு நகைகள் மற்றும் சொத்துக்கள் இருந்தன என ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பியது. கோயில் திருட்டு சம்பவம் நிகழ்ந்த பின் எவ்வளவு நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது, கோயிலில் உள்ள நகைகள், சிலைகள் சொத்து எவ்வளவு என ஆய்வு செய்து அறிக்கை தர நீதிபதிகள் உத்தரவு அளித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்ட கோயில்களின் இணை ஆணையர் நேரில் ஆஜராகி பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவு அளித்துள்ளனர்.

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவட்டாறு எனும் ஊரில் அமைந்துள்ள ‌ஒரு பழைமையான வைணவக் கோயிலாகும். இது 108 வைணவத் திருத்தலங்களுள் 76 ஆவதாக வைத்து எண்ணப்படுகிறது. மேலும் இது 13 மலைநாட்டுத் திருத்தலங்களுள் ஒன்றாகும்.

திருப்பாதம் எனும் 3 பகுதிகளை ஒவ்வொரு நுழை வாயிலிலும் காணலாம். திருமுக நிலைவாயிலில் அறிதுயிலில் ஆழந்துள்ள முகத்தையும் நீட்டிய இடக்கையையும் ஆதிசேடனையும் கருடாழ்வாரையும் காணலாம். திருக்கர வாயிலில் சின்முத்திரை காட்டும் வலக்கரத்தையும் சங்கு சக்கரம் உள்ளிட்ட ‌ஐம்படையினையும் காணலாம். தரையில் தாயாருடன் கூடிய பெருமாளின் உலோகத் திருமேனியும் வைக்கப்பட்டுள்ளது. கடைசியாக திருப்பாத வாயிலில் திருப்பாதங்களையும் இருவர் பயந்து ஒளிந்திருக்கும் சிலைகளையும் காணலாம்.

தங்க சிவலிங்கம், பஞ்சலோக சிலைகள், பழைய கலசம், தங்க நகைகளை அதன் பழைய இடத்தில் வைக்க மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் திருவட்டாறு ஆதிகேசவபெருமாள் கோயிலில் தற்போது உள்ள நகைகள் மற்றும் சொத்துக்கள் குறித்து அறிக்கை தர ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

 

The post திருவட்டாறு ஆதிகேசவபெருமாள் கோயில் சொத்து: அறிக்கை தர ஐகோர்ட் கிளை உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: