போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகையிலை விழிப்புணர்வு

 

மதுரை, ஜூன் 2: உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மதுரை மாநகர போலீசாருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. இதில் சிஎஸ்ஐ பல் மருத்துவமனை கல்லூரி டீன் சரவணன், முதல்வர் தன்வீர், தலைமை மருத்துவர் வின்னி பிரட் ஆகியோர் பங்கேற்றனர். அவர்கள் காவல் துறையினருக்கு புகையிலை தொடர்பான கெடுதல்கள், உடல் உபாதைகள், நோய் பாதிப்புகள் ஆகியவை குறித்து எடுத்துரைத்தனர். பின்பு போலீசாருக்கு உடல் பரிசோதனை நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர், தலைமையிடத்து துணை கமிஷனர் மங்களேஸ்வரன், போக்குவரத்து திட்ட கூடுதல் கமிஷனர் திருமலைகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர்.

The post போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகையிலை விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: