எஸ்எப்டி தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு: வருமான வரித்துறை அறிவிப்பு

புதுடெல்லி: எஸ்எப்டி ரிட்டர்ன் தாக்கல் செய்ய காலக்கெடுவை மேலும் சில நாட்களுக்கு வருமான வரித்துறை நீட்டித்துள்ளது. வங்கிகள்,அன்னிய செலாவணி பரிமாற்ற டீலர்கள், தபால் நிலையங்கள், ஷேர் நிறுவனங்களில் ரூ.10 லட்சத்திற்கு பணப்பறிமாற்றம் நடந்தால் 2022-23 நிதியாண்டில் தங்களது வாடிக்கையாளர்களின் பண பரிவர்த்தனை விவரங்களை(எஸ்எப்டி) மே மாதம் 31ம் தேதிக்குகள் தாக்கல் செய்ய வேண்டும் என்று வருமான வரித்துறை உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வருமான வரித்துறை டிவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
‘எஸ்எப்டி தாக்கல் செய்வதற்காக பலர் ஒரே நேரத்தில் விண்ணப்பித்ததால் இணைய தளத்தில் கடும் பிரச்னைகள் ஏற்பட்டது. எனவே இதற்கான காலக்கெடு மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது’ என கூறப்பட்டுள்ளது. எஸ்எப்டியை தாக்கல் செய்ய தாமதம் ஆனால் ஒரு நாளைக்கு ரூ.1000 வீதம் அபராதம் விதிக்கப்படும். அதே போல் சரியான விவரங்களை தாக்கல் செய்ய தவறினாலும் அபராதம் விதிக்கப்படும்.

The post எஸ்எப்டி தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு: வருமான வரித்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: