சூரியன் எப்.எம். சார்பில் நெல்லையில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு வாகன பிரசாரம் துவக்கம்

நெல்லை, ஜூன் 1: உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி நெல்லை சூரியன் எப்.எம். மற்றும் வண்ணார்பேட்டை அருணா கார்டியா கேர் ஆகியவை இணைந்து புகையிலை பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பிரசார வாகன இயக்க துவக்க விழா நெல்லையில் நேற்று நடந்தது. நெல்லை வண்ணார்பேட்டை செல்லப் பாண்டியன் சிலை அருகே நடந்த இந்நிகழ்ச்சியை நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, கொடியசைத்து துவக்கிவைத்தார். அப்போது அவர் கூறுகையில் ‘‘ஆண்டு தோறும் மே 31ம்தேதி போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது. அரசு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. நெல்லையில் சூரியன் எப்எம்., அருணா கார்டியா கேர் இணைந்து இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளன. . இந்த பிரசார ஊர்தி, நெல்லை மாநகரம் முழுவதும் 5 நாட்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி போதை ஒழிப்பு விழிப்பு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது’’ என்றார். நிகழ்ச்சியில் நெல்லை சூரியன் எப்.எம். பொது மேலாளர் முரளிபாபு, அருணா கார்டியா கேர் இயக்குநர் டாக்டர் அருணாச்சலம், நிர்வாக இயக்குநர் டாக்டர் சொர்ணலதா, கவுன்சிலர் தச்சை சுப்பிரமணியன், முன்னாள் கவுன்சிலர் எஸ்.வி.சுரேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து பிரசார ஊர்தி மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு புறப்பட்டுச் சென்றது.

The post சூரியன் எப்.எம். சார்பில் நெல்லையில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு வாகன பிரசாரம் துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: