அருங்காட்சியத்தில் வார்லி ஓவியப்பயிற்சி

நெல்லை, மே 31: நெல்லை அரசு அருங்காட்சியத்தில் வார்லி ஓவியப்பயிற்சி நடந்தது. கோடை விடுமுறையை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியமானது மாவட்ட மைய நூலகத்துடன் இணைந்து பள்ளி மாணவ- மாணவிகளின் கலை, வாசிப்புத் திறனை மேம்படுத்த பல்வேறு சிறப்பு பயிற்சி முகாம்களை நடத்தி வருகிறது. அந்தவகையில் மாணவ- மாணவிகளுக்கு வார்லி ஓவியப்பயிற்சி அளிக்கப்பட்டது. ஓவியப்பயிற்சியை காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி துவக்கிவைத்தார். கவின் கலைமன்ற மாணவர் மாரிஸ் பயிற்சி அளித்தார். இதில் ஏராளமான மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.

The post அருங்காட்சியத்தில் வார்லி ஓவியப்பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: