கோவை கல்லூரி அதிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

மதுரை: கோவை கல்லூரி அதிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.கோவை மாவட்டம், குருடம்பாளையம் வடமதுரை நால்வர் நகரை சேர்ந்தவர் சுபாஷ் கிருஷ்ணன் (34). கோவையில் சொந்தமாக பி.எட் கல்லூரி நடத்தி வந்தார். இவர் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இவர்களின் விவாகரத்து வழக்கில் மதுரை மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக சுபாஷ் கிருஷ்ணன் நேற்று முன்தினம் மதுரை வந்தார். அப்போது அவர் மன அழுத்தத்தில் இருந்ததாக தெரிகிறது. அவர் தனது தம்பி மதன்குமாருக்கு வாட்ஸ்அப் வீடியோ செய்து, ‘‘எனக்கு வாழ பிடிக்கவில்லை. எல்லோரையும் கஷ்டப்படுத்தி விட்டேன். எனது சாவுக்கு யாரும் காரணமில்லை’’ என பேசியுள்ளார். பின்னர், நேற்று முன்தினம் நள்ளிரவில் சமயநல்லூர் – கூடல்நகர் இடையே வந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

The post கோவை கல்லூரி அதிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: