சிவகங்கையை சேர்ந்தவர் மதுரையில் கைது

 

மதுரை, மே 31: மதுரை மதிச்சியம் வைகை வடகரை பகுதியை சேர்ந்தவர் பால்பாண்டி(29). இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த போது, மர்ம நபர் ஒருவர் வீட்டினுள் புகுந்து, அங்கிருந்த விலை உயர்ந்த செல்போனை திருடினார். பின்னர், நைசாக வெளியே செல்ல முயன்ற போது, வீட்டிலிருந்தவர்கள் கையும் களவுமாக அந்த நபரை பிடித்துவிட்டனர். பின்னர், மதிச்சியம் போலீசில் ஒப்படைக்கப்பட்ட அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், செல்போன் திருடிய நபர், சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே உள்ள பொய்யலூர் படத்தான்பட்டியை சேர்ந்த மணிகண்டன்(40) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது ெசய்து, செல்போனை மீட்டனர்.

The post சிவகங்கையை சேர்ந்தவர் மதுரையில் கைது appeared first on Dinakaran.

Related Stories: