ஒட்டன்சத்திரத்தில் பள்ளி ஆசிரியை வீட்டில் கொள்ளை

ஒட்டன்சத்திரம், மே 31: ஒட்டன்சத்திரம் ஆசிரியர் காலனி பகுதியை சேர்ந்தவர் கணேசன். ஆடலூர் கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி செல்வராணி (45). இவர் காளஞ்சிபட்டியில் உள்ள தனியார் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் கணவன்- மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர்.

இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். செல்வராணி வேலை முடிந்து வந்து பார்த்த போதுதான் இத்திருட்டு சம்பவம் பற்றி தெரியவந்தது. இதுகுறித்த புகாரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post ஒட்டன்சத்திரத்தில் பள்ளி ஆசிரியை வீட்டில் கொள்ளை appeared first on Dinakaran.

Related Stories: