ராயப்பன்பட்டியில் குழந்தைகளுடன் தாய் மாயம்

தேவாரம், மே 30: ராயப்பன்படடி வடக்குதெருவை சேர்ந்தவர் பாலமுருகன். விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி அசந்தா (33). இவர்களுக்கு ஒரு ஆண், இரண்டு மகள்கள் உள்ளனர். பாலமுருகன் தினமும் வேலைக்கு சென்று விட்டு மாலையில் மீண்டும் வீட்டுக்கு வருவது வழக்கம். வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டில் வந்து பார்த்தபோது மனைவி அசந்தா மற்றும் குழந்தைகள் சக்தியவர்சினி (8), விஷ்ணு பாலா (4), ஆகியோரை காணவில்லை. இது குறித்து பாலமுருகன் ராயப்பன்பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் எஸ்.ஐ.முனியம்மாள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றார்.

The post ராயப்பன்பட்டியில் குழந்தைகளுடன் தாய் மாயம் appeared first on Dinakaran.

Related Stories: