சுதந்திர தின விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

 

சிவகங்கை, மே 30: சுதந்திர தின விருது-2023க்கு சிறந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் ஆஷா அஜீத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழக முதலமைச்சர் அவர்களால் சுதந்திர தின விழாவில் சிறந்த சமூக சேவகர் மற்றும் சிறந்த தொண்டு நிறுவனங்களுக்கு சுதந்திர தின விருது வழங்கப்பட உள்ளது. இவ்விருதினை பெற தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்.

குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூகநலன் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சமூக சேவை நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.

https://awards.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து விண்ணப்பங்ளை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் தலா இரண்டு நகல்கள், புகைப்படம் ஆகியவற்றுடன் சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள சிவகங்கை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஜூன் 10ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post சுதந்திர தின விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: