கஞ்சா கடத்தல் வழக்கில் வாலிபர்கள் 4 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை

மதுரை, மே 30: கஞ்சா பறிமுதல் வழக்கில் 4 வாலிபர்களுக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. மதுரை மதிச்சியத்தைச் சேர்ந்த சரவணக்குமார் (எ) வாழைப்பழ சரவணகுமார்(26), ஆழ்வார்புரம் கண்ணன்(எ) மொக்கை கண்ணன்(26), முகேஷ்(எ)மூக்கன்(23), ஜெயபால்(36) ஆகியோர் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் 21ம் தேதி 22 கிலோ கஞ்சாவுடன் மதிச்சியம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீதான கஞ்சா கடத்தல் வழக்கின் விசாரணை மதுரை முதலாவது கூடுதல் போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.அரசு தரப்பில் வக்கீல் கே.விஜயபாண்டியன் ஆஜரானார். இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் நீதிபதி ஏ.எஸ்.ஹரிஹரகுமார் நேற்று தீர்ப்பளித்தார். அதில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், 4 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா ரூ. ஒரு லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

The post கஞ்சா கடத்தல் வழக்கில் வாலிபர்கள் 4 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Related Stories: