திமுக நெசவாளர் அணி நிர்வாகிகள் நியமனம்

சென்னை: திமுக நெசவாளர் அணியின் சார்பில் மாவட்டங்களுக்கான அமைப்பாளர், துணை அமைப்பாளர்களை நியமித்து அணியின் தலைவர் நன்னியூர் ராஜேந்திரன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: திமுக தலைவரின் ஆணைப்படி மாவட்ட செயலாளர் ஒப்புதலுடன் திமுக நெசவாளர் அணியின் மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மத்திய மாவட்டத்தின் தலைவராக சண்முகம், துணைத்தலைவராக வடிவேல், அமைப்பாளராக எஸ்.சங்கர் மற்றும் துணை அமைப்பாளர்களாக சாய்மோகன், தர், வேலு, அச்சுதன், ரஜினி ஆகியோரும், திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தின் தலைவராக சுப்பிரமணியம், துணை தலைவராக ஜெயகுமார், அமைப்பாளராக வெங்கடேசன், துணை அமைப்பாளர்களாக ஈஸ்வரைய்யா, சிட்டிபாபு, குருவப்பா, முரளி, பாஸ்கர், ஈஸ்வரகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தலைவராக கணேசன், துணை தலைவராக ராமலிங்கம், அமைப்பாளராக மலர்மன்னன், துணை அமைப்பாளர்களாக பிரபாகரன், வீராகவன், அசோக்குமார், தேவராஜன், முருகானந்தன் மற்றும் காஞ்சிபுரம் மாநகரத்தின் தலைவராக சுப்பிரமணி, துணை தலைவராக இளங்கோவன், அமைப்பாளராக பழனி, துணை அமைப்பாளர்களாக செல்வமணி, பாலு, சுதர்சன், தேவபிரகாஷ், குணசேகர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post திமுக நெசவாளர் அணி நிர்வாகிகள் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: