முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பு வலங்கைமான் தாலுகாவில் ஜமாபந்தி பொதுமக்களிடம் இருந்து வரப்பெற்ற 300 மனுக்கள் ஏற்பு

வலங்கைமான், மே 27: வலங்கைமான் தாலுகா அலுவலகத்தில் கடந்த 24ம் தேதி முதல் 3 நாட்கள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் விஜயன் தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற 300 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் 14 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது . வலங்கைமான் தாலுகாவில் 71 வருவாய் கிராமங்கள் உள்ளது 1432ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு வலங்கைமான் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் விஜயன் தலைமையில் மூன்று நாட்கள் நடைபெற்றது .மே 24ந்தேதி ஆவூர் உள்வட்டத்தை சேர்ந்த அன்னு குடி துவங்கி 47.

ரெகுநாதபுரம் முடிய 31 வருவாய் கிராமங்களுக்கும் 25ந்தேதி வலங்கைமான் உள்வட்டத்தை சேர்ந்த சந்திரசேகரபுரம் வருவாய் கிராமம் முதல்மருவத்தூர் கிராமம் உள்பட 17 வருவாய் கிராமங்களுக்கும் 26ந்தேதி ஆலங்குடி உள்வட்டத்தை சேர்ந்த திருவோணமங்கலம் கிராமம் முதல் கொட்டையூர் வரை உள்ள 23 வருவாய் கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடைபெற்றது. கடந்த 24ஆம் தேதி நடைபெற்ற ஜமாபந்தியில் 94 மனுக்களும் 25ஆம் தேதி நடைபெற்ற ஜமாபந்தியில் 97 மனுக்களும் கடைசி நாளான நேற்று நடைபெற்ற ஜமாபந்தியில் 109 மனுக்கள் என 300 மனுக்கள் வர பெற்றன.

பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற முதியோர் உதவித்தொகை பட்டா மாறுதல் பட்டா கோருதல் உள்ளிட்ட 300 மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் 14 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு அதற்கான ஆணைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் அன்பழகன் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் தேவகி மண்டல துணை வட்டாட்சியர் ஆனந்த் வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் வருவாய்த் துறையினர் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பு வலங்கைமான் தாலுகாவில் ஜமாபந்தி பொதுமக்களிடம் இருந்து வரப்பெற்ற 300 மனுக்கள் ஏற்பு appeared first on Dinakaran.

Related Stories: