நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், பணியாளர்களுக்கான பல்நோக்கு மருத்துவ முகாமை துவக்கி வைத்தார் அமைச்சர் எ.வ.வேலு..!!

சென்னை: சென்னை, கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான பல்நோக்கு மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின்படி, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று சென்னை, கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் நலன் காக்கும் பொருட்டு பல்நோக்கு மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்.

நெடுஞ்சாலைத்துறை ஊழியர்களின் உடல் நலத்தினை பேணும் பொருட்டு, காவேரி மருத்துவமனையின் உதவியுடன், பொது மருத்துவம், இருதய மருத்துவம், எலும்பியல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், மற்றும் உணவியல் நிபுணர்கள் மூலம் இம்முகாம் நடைபெறுவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். மேலும், அலுவலர்கள் அனைவரும் ‘வருமுன் காப்போம்‘ என்ற கருத்தினை மனதில் கொண்டு எந்தவித தயக்கமும் இன்றி இந்த முகாமினை பயன்படுத்தி பலன் பெறுமாறு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வின் போது, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு கூடுதல் தலைமை செயலர் திரு பிரதீப் யாதவ், இ.ஆ.ப, காவேரி மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் திரு. அய்யப்பன் பொன்னுசாமி, நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர் திருமதி.நா.சாந்தி, தலைமைப் பொறியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், பணியாளர்களுக்கான பல்நோக்கு மருத்துவ முகாமை துவக்கி வைத்தார் அமைச்சர் எ.வ.வேலு..!! appeared first on Dinakaran.

Related Stories: