தூத்துக்குடி, மே 25: தூத்துக்குடியில் 5 வாள்கள் மற்றும் கிறிஸ்டல் கல் நிற பவுடரை வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சத்தியராஜ் மேற்பார்வையில் வடபாகம் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் தலைமையில் சப்.இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் மற்றும் தெர்மல்நகர் காவல் நிலைய ஏட்டு மாணிக்கராஜ், முதல்நிலை காவலர்கள் தெர்மல்நகர் மகாலிங்கம், மத்தியபாகம் செந்தில், முத்தையாபுரம் சாமுவேல், காவலர் முத்துப்பாண்டி, தென்பாகம் போலீஸ்காரர் திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி திரேஸ்புரம் மாதவநாயர் காலனியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர். இதில் அவர், அதே பகுதியைச் சேர்ந்த மனுவேல் மகன் அன்டோ (47) என்பதும், அவர் வைத்திருந்த சாக்கு பையில் 5 வாள்கள் மற்றும் போதை பொருள் போன்ற கிறிஸ்டல் கல் நிற பவுடர் வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அன்டோவை கைது செய்து அவரிடமிருந்த 5 வாள்கள் மற்றும் 615 கிராம் போதை பொருள் போன்ற கிரிஸ்டல் கல் நிற பவுடரை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வடபாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post தூத்துக்குடியில் 5 வாள்களுடன் ஒருவர் கைது appeared first on Dinakaran.
