பிறவி மருந்தீஸ்வரர் கோயில் குள நீர் நிலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி விறு, விறு திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையர் தகவல்

 

திருத்துறைப்பூண்டி, மே 24: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகரில் புகழ் வாய்ந்த பிறவி மருந்தீஸ்வரர் கோயிலுக்கு (பெரியகோயில்) முன்பு உள்ள திருக்குளம் நகராட்சி சார்பில் ரூ.149 லட்சத்தில் மேம்பாடு செய்யும் பணியில் தடுப்பு சுவர், நடைபாதை, சாலையோர பூங்கா மின் விளக்கு போன்றவை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 60 சதவீதம் பணி முடிந்துள்ளது.

இந்நிலையில், நாகப்பட்டினம் இணை ஆணையர் நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, திருக்குளத்தில் நீர் நிலை ஆக்கிரமிப்பில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்கள் அகற்றும் பணி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மணவழகன், பிறவி மருந்தீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் முருகேசன் ஆகியோர் தலைமையில் தாசில்தார் கார்ல்மார்க்ஸ், நகராட்சி ஆணையர் பிரதான்பாபு, டிஎஸ்பி சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன், எஸ்.ஐ.முத்துக்குமார் மேற்பார்வையில் நடைபெற்றது. ஆக்கிரப்புகள் அகற்றும் பணி முடிந்ததும், நடைபாதை உள்ளிட்ட மற்ற பணிகள் நடைபெறும் என்று நகராட்சி ஆணையர் பிரதான் பாபு தெரிவித்தார்.

The post பிறவி மருந்தீஸ்வரர் கோயில் குள நீர் நிலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி விறு, விறு திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: