திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க கூட்டம்: சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த ஒழையூர் கிராமத்தில், திமுக அரசின் 2 ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில், சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் குமார் தலைமை தாங்கினார். இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட நிர்வாகி வெங்கடேசன், மாவட்ட குழு உறுப்பினர் சிவராமன், ஒன்றியக் குழு உறுப்பினர் நதியாகோபி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மணி, ஒன்றிய துணைச் செயலாளர் தமிழ்வேந்தன், மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் ரத்தினமாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் முனுசாமி வரவேற்றார். இதில், காஞ்சிபுரம் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ மற்றும் தலைமை திமுக பேச்சாளர் மங்கலம் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். திமுக ஆட்சியின் இரண்டு ஆண்டு கால சாதனைகளை பட்டியலிட்டு பொது மக்களுக்கு எடுத்துரைத்தனர்.

பெரும்புதூர்: காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், பெரும்புதூர் வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி, மாணவரணி சார்பில் கூட்டம் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுகூட்டம் ஓ.எம்.மங்கலம் பகுதியில் நடந்தது. இதில், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாலா தலைமை வகித்தார். ஒன்றிய அவை தலைவர் சிவபாதம் வரவேற்றார். ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் நரேஷ்குமார், பழனி, சுவாதிகன், தட்சிணாமூர்த்தி மாணவரணி துணை அமைப்பாளர் விமல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பெரும்புதூர் சட்டமன்றத் தொகுதி பார்வையாளர் உமாகாந்த், தலைமை கழக பேச்சாளர் முரசொலி மூர்த்தி, ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டு, தமிழக அரசின் இரண்டு ஆண்டு கால சாதனைகள் குறித்து விளக்கி பேசினர். இதேபோல், பெரும்புதூர் தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி, மாணவரணி சார்பில் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொது கூட்டம் பெரும்புதூர் தேரடி அருகில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் குண்ணம் ராமமூர்த்தி தலைமை வகித்தார். பொதுகுழு உறுப்பினர் கணேஷ்பாபு, ஒன்றிய பொருளாளர் பரமசிவன், பேரூர் செயலாளர் சதிஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை கழக பேச்சாளர் முரசொலி மூர்த்தி, ஒன்றிய செயலாளர் மேவளூர்குப்பம் கோபால் ஆகியோர் கலந்து கொண்டு தமிழக அரசின் சாதனைகளை விளக்கி பேசினர்.

The post திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க கூட்டம்: சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: