மகளிர் சுயஉதவிகுழுவினருக்கு ரூ.24.22 லட்சம் பொருளாதார கடன்

 

வலங்கைமான், மே 22: வலங்கைமான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிர் சுயஉதவிகுழுவினருக்கு ரூ.24 லட்சத்து 22 ஆயிரம் பொருளாதார கடன் வழங்கப்பட்டது.
வலங்கைமான் தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் உண்ணாமலை அம்மன் மகளிர் சுயஉதவிகுழுவிற்கு ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் மகாமாரியம்மன் குழுவிற்கு ரூ.4 லட்சத்து 80 ஆயிரம், புரட்சிதலைவி குழுவிற்கு ரூ.4 லட்சத்து 80 ஆயிரம், காந்தி ஜி அம்மன் குழுவிற்கு ரூ.4 லட்சத்து 98 ஆயிரம், தேவி குழுவிற்கு ரூ.4 லட்சத்து 84 ஆயிரம் ஆக கூடுதல் தொகையான ரூ.24 லட்சத்து 22 ஆயிரம் தொகைக்கான காசோலைகளை வங்கி தலைவர் குணசேகரன் வழங்கினார். நிகழ்ச்சியில் சங்க உதவி செயலாளர் உலகநாதன், எழுத்தர் அன்பரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மகளிர் சுயஉதவிகுழுவினருக்கு ரூ.24.22 லட்சம் பொருளாதார கடன் appeared first on Dinakaran.

Related Stories: