வீட்டு மனை பட்டா வழங்க மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

மாமல்லபுரம், மே 19: செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை, உதவித்தொகை, இலவச உபகரணங்கள் உள்ளிட்ட அரசு சலுகைகளை பெற்று பயனடைந்து வருகின்றனர். அனைவரும் வறுமை கோட்டிற்கு கீழ் நிலையில் உள்ளனர். இதில், பெரும்பாலானோர் திருமணமாகி குழந்தைகளுடன் வாடகை வீடுகளில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. சிறு வருமானத்திற்காக முடிந்தளவு கிடைக்கின்ற வேலைகளை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். போதிய வருமானமின்றி பல குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றனர். மேலும், வீடு வாடகையால் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, மாவட்டம் முழுவதும் உள்ள அந்தந்த தாலுகாக்களில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி, அரசு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வீட்டு மனை பட்டா வழங்க மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: