இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி கைது செய்யாறு அருகே பரபரப்பு செல்போனில் ஆபாச வீடியோக்களை காட்டி

செய்யாறு, மே 19: செய்யாறு அருகே செல்போனில் ஆபாச வீடியோக்களை காட்டி இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த பில்லாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ், சமையல் மாஸ்டர். இவரது மனைவி ராஜேஸ்வரி(22). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் ராஜேஸ்வரி தனது மகள் பிரியாவுடன் வீட்டின் வெளியே அமர்ந்து இருந்துள்ளார். அப்போது, அவரது கணவர் தினேஷின் உறவினரான மோரணம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சுரேஷ்(40) என்பவர் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர், அவர் தனது செல்போனில் வைத்திருந்த ஆபாச வீடியோக்களை ராஜேஸ்வரியிடம் காண்பித்து அதனை பார்க்கும்படி தொந்தரவு செய்துள்ளார். மேலும், அவருக்கு பாலியல் ரீதியாக சீண்டலில் ஈடுபட்டதுடன், எனது ஆசைக்கு இணங்காவிட்டால் உன்னை பற்றி ஊரெல்லாம் தவறாக கூறுவேன் என்றதுடன் கொலை மிரட்டலும் விடுத்தாராம். இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரி கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். இதை பார்த்த சுரேஷ் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதுகுறித்து ராஜேஸ்வரி தூசி போலீசில் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்கு பதிந்து சுரேஷை கைது செய்தார். பின்னர், அவரை செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

The post இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி கைது செய்யாறு அருகே பரபரப்பு செல்போனில் ஆபாச வீடியோக்களை காட்டி appeared first on Dinakaran.

Related Stories: