ஊட்டி அருகே 34 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு

ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே அரசு உதவி பெறும் சாம்ராஜ் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 கணித தேர்வின்போது சில மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் விடை எழுத உதவியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனியசாமி விசாரணை நடத்தி, கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி பள்ளிக் கல்வித் துறைக்கு அனுப்பி வைத்தார். மாணவர்களின் வினாத்தாள்கள் தனியாக சீலிடப்பட்ட உறையில் அரசு தேர்வுகள் இயக்குநரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அறை கண்காணிப்பாளர் ராம்கி, மூர்த்தி, முதன்மை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், வழித்தட அலுவலர் சீனிவாசன் மற்றும் செந்தில் ஆகிய 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் சாம்ராஜ் பள்ளியில் தேர்வு எழுதிய 34 மாணவ, மாணவிகளின் கணித பாடத்திற்கான தேர்வு முடிவு மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தனி குழுவினர் நேரடி விசாரணைக்கு பின் முடிவுகள் வெளியாகும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

The post ஊட்டி அருகே 34 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு appeared first on Dinakaran.

Related Stories: